சுமை தூக்கும் தொழிலாளர்கள் மனு

சுமை தூக்கும் தொழிலாளர்கள் மனு
Updated on
1 min read

திருநெல்வேலி பெருமாள்புரத்தி லுள்ள தமிழ்நாடு உணவு சேமிப்பு கிடங்கில் பணிபுரியும் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு தினமும் முறையாக வேலை வழங்க வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏஐசிசிடியூ தொழிற்சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.

அச் சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் கே.கணேசன் தலைமையில் அளிக்கப்பட்ட மனு:

தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்துக்கு திருநெல்வேலியில் எஸ்என் ஹைரோடு, பெருமாள்புரம், முத்தூர் ஆகிய பகுதிகளில் கிடங்குகள் உள்ளன. பெருமாள்புரம் கிடங்கில் 44 சுமைதூக்கும் தொழிலாளர்கள் கடந்த 30 ஆண்டுகளாக பணிபுரிகிறார்கள். மாதந்தோறும் 3 கிடங்குகளிலும், 10 ஆயிரம் மெட்ரிக் டன் வரை பொருட்கள் இயக்கம் நடைபெறுகிறது.

பெருமாள்புரம் கிடங்கில் 44 சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு போதிய வேலையின்றி, வாழ்வாதார இழப்புக்கு ஆளாகியுள்ளனர். கிடங்கில் இருப்பு சரக்குகளை ஒரு குறிப்பிட்ட காலஅவகாசத்தில் ரிலீஸ் செய்யவும், நிர்வாகம் மாதம் கையாளும் சரக்கு இயக்கத்தை 3 கிடங்குகளுக்கும் சமமாக இயக்கம் செய்யவும் நடவடிக்கை எடுத்து சுமைதூக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in