மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரியில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Updated on
1 min read

கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலி யுறுத்தி, தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் தொழிலாளர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். வேலூர் மண்டல செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் திருப்பதி முன்னிலை வகித்தார். கிருஷ்ணகிரி திட்ட தலைவர் சின்னசாமி, திட்ட செயலாளர் முரளி, பொருளாளர் மணி வேல் ஆகியோர் பேசினர்.

மண்டல செயலாளர் முருகன் பேசுகையில், நாங்கள் 15 ஆண்டுகளுக்கும் மேல் மின் வாரியத்தில் 8400 பேர் ஒப்பந்த பணியாளர்களாக பணியாற்றி வருகிறோம். கடந்த 22.02.2018 அன்று மின் வாரிய ஊதிய உயர்வு ஒப்பந்தத் தில் ஒப்பந்த தொழிலாளர்களின் தினக்கூலி ரூ.380 என நிர்ணயிக்கப் பட்டது. ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை.

எனவே ஒப்பந்த தொழிலாளர் களுக்கு தினக்கூலி ரூ.380 வழங்க வலியுறுத்தி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் குடியுரிமை ஒப்படைக்கும் போராட்டத்தை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவுடன், ஆதார், வாக்காளர் மற்றும் குடும்ப அட்டைகளை அலுவலர்களிடம் கொடுத்தனர். கோரிக்கை மனுவை பெற்ற அலுவலர்கள் அடையாள அட்டைகளை பெற மறுத்துவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in