

புதுக்கோட்டை பாலன்நகர் அருகே சேதுராமன் வீதியைச் சேர்ந்தவர் முத்து மகன் நல்லையா(23). இவர், அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்ததாகவும், இதற்கு பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில்,நேற்று முன்தினம் இரவு, அந்தப் பெண்ணின் வீட்டு மொட்டை மாடியில் இருந்த நல்லையாவை, பெண்ணின் சகோதரர் பிரபு(26) தாக்கியுள்ளார். இதில் அவர் இறந்தார். இதுகுறித்து திருக்கோகர்ணம் போலீஸார் விசாரிக்கின்றனர்.