

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வுக் கூட்டத்தில் 393 மனுக்கள் பெறப்பட்டன.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமா உள்ளிட்டோர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர். கூட்டத்தில் மொத்தம் 393 மனுக்கள் பெறப் பட்டன. முன்னதாக, சோளிங்கர் ஊராட்சி ஒன்றியத்தில் பணி புரிந்து உயிரிழந்த அசோகன் என்பவரின் மகளுக்கு கருணை அடிப்படையில் திமிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இள நிலை உதவியாளர் பணி நியமன ஆணையை ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வழங்கினார்.