கடலூரில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி ஆலோசனைக் கூட்டம்
கடலூரில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன் தலைமை தாங்கினார். கடலூர் நகர செயலாளர் செந்தில் முன்னிலை வகித்தார்.நகர துணை செயலாளர் செங்கதிர், மாவட்ட துணை அமைப்பாளர்கள் ஜெயக்குமார்,தாஸ், தொகுதி துணை அமைப்பாளர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் பெட்ரோல் டீசல் விலையை உடனடியாக தமிழக அரசு குறைக்க வேண்டும். கடலூர் வில்வநகரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரின் போராட்டத்தால் சாலைப் பணி சீரமைப்பு செய்யப்பட்டு வந்தது. தற்போது அப்பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது. மாவட்ட ஆட்சியர் இப்பணியை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 15-ம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் நெய்வேலியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
