திண்டுக்கல்லில் இருவேறு விபத்துகளில் இருவர் உயிரிழப்பு

திண்டுக்கல்லில்  இருவேறு விபத்துகளில் இருவர் உயிரிழப்பு
Updated on
1 min read

நாமக்கல்லைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சக்தீஸ்வரன்(35). கரூரிலிருந்து ராமநாதபுரத்துக்கு பெட்ரோல் டேங்கர் லாரியை ஓட்டிச்சென்றார். இவருடன் கிளீனர் விக்னேஸ்வரன் (27) இருந்தார்.

திண்டுக்கல் புறவழிச் சாலையில் உள்ள விளையாட்டு அரங்கம் அருகே சென்றபோது முன்னால் சென்ற லாரியின் பின்புறத்தில் டேங்கர் லாரி மோதியது. இதில் ஓட்டுநர் சக்தீஸ்வரன் உயிரிழந்தார். கிளீனர் விக்னேஸ்வரன் காயமடைந்தார். திண்டுக்கல் அருகே டி.அய்யம்பாளையம் கார்த்திக்(37). இவர், கேரளாவில் மென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்தார். மதுரையில் உள்ள நண்பரை பார்த்துவிட்டு காரில் திரும்பினார். திண்டுக்கல் புறவழிச்சாலை அருகே முன்னால் சென்ற லாரி மீது கார் மோதியது. இதில் கார்த்திக் உயிரிழந்தார். தாடிக்கொம்பு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in