பணியிட மாறுதலாகிச் செல்லும் ஆய்வாளர்களுக்கு எஸ்பி வாழ்த்து

பணியிட மாறுதலாகிச் செல்லும் ஆய்வாளர்களுக்கு எஸ்பி வாழ்த்து

Published on

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றும் 26 காவல் ஆய்வாளர்கள் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டனர். அவர்களுக்கு காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் நினைவு பரிசு வழங்கினார்.

அப்போது, “ சிறப்பான முறையில் பணியாற்றியுள்ளீர்கள். அதற்கு என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். புதிதாக பொறுப்பேற்க உள்ள காவல் நிலையங்களில் பொதுமக்களுக்கு உதவியாக சிறப்பாக பணியாற்ற வேண்டும்” என்று வாழ்த்தினார். ஏடிஎஸ்பி கோபி, மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து உடனிருந்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in