தூத்துக்குடியில் மூதாட்டியிடம் நகை பறிப்பு

தூத்துக்குடியில் மூதாட்டியிடம் நகை பறிப்பு
Updated on
1 min read

தூத்துக்குடி கதிர்வேல்நகரை சேர்ந்த முருகேசன் மனைவி தங்கம் ( 65). இவர், நேற்று முன்தினம், அப்பகுதியில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சுமார் 20 வயது மதிக்கத்தக்க மர்ம நபர்கள் 2 பேர் அவரை பின் தொடர்ந்து வந்துள்ளனர். திடீரென தங்கம் கழுத்தில் கிடந்த 2 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு அவர்கள் தப்பி ஓடி விட்டனர்.

இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in