விருது பெற்ற அரசு பள்ளி மாணவருக்கு பாராட்டு விழா

விருது பெற்ற அரசு பள்ளி மாணவருக்கு பாராட்டு விழா
Updated on
1 min read

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள வினைதீர்த்தநாடார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகம் சிறப்பாக செயல்பட்டதால் தமிழக அரசு ஊக்கத்தொகையாக ரூ.50 ஆயிரம் வழங்கியது. மேலும், இப்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவன் அ.கார்த்திக் புதியவன் என்பவருக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் வழங்கப்படும் இன்ஸ்பயர் விருதும், பரிசாக ரூ.10 ஆயிரமும் கிடைத்துள்ளது.

இதையடுத்து பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் விருது பெற்ற மாணவருக்கு பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது. விழாவுக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மதனசிங் தலைமை வகித்தார். கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் குணம், ஊர் முக்கிய பிரமுகர்கள் தங்கப்பழம், ஆனந்தன், சக்திவேல், விஜயன் ஆகியோர் பெற்றோர்- ஆசிரியர் கழகத்தையும், ஆசிரியர்களையும், இன்ஸ்பயர் விருது பெற்ற மாணவனையும் பாராட்டி பேசினர். தமிழாசிரியர் சங்கரநாராயணன் நன்றி கூறினார்.

விழா ஏற்பாடுகளை தளிர் பசுமை அமைப்பு நிர்வாகிகள் வேல்முருகன், சதீஷ் செய்திருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in