மணிமுத்தாறு அணையில் 100 மி.மீ. மழை

மணிமுத்தாறு அணையில் 100 மி.மீ. மழை
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் பரவலாக பலத்த மழை பெய்தது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக மணிமுத்தாறு அணையில் 100 மி.மீ. மழை பதிவானது. பாபநாசத்தில் 76 மி.மீ., சேரன்மகாதேவியில் 75, களக்காட்டில் 42.2, அம்பாசமுத்திரத்தில் 39, சேர்வலாறு அணையில் 29 மி.மீ. மழை பதிவானது.

பாபநாசம் அணை நீர்மட்டம் 122 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 792 கனஅடி நீர் வந்தது. 742 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 127 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 109.60 அடியாகவும் இருந்தது. அணைக்கு விநாடிக்கு 683 கனஅடி நீர் வந்தது. 455 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 46.20 அடியாகவும், நம்பியாறு அணை நீர்மட்டம் 13.25 அடியாகவும், கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 18.25 அடியாகவும் இருந்தது.

தென்காசி

கடனாநதி அணை நீர்மட்டம் 71.50 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 64.50 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 59.06 அடியாகவும், குண்டாறு அணை நீர்மட்டம் 35 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 72.50 அடியாகவும் இருந்தது. குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. நேற்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் சற்று அதிகமாக இருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in