தேமுதிக யாரிடமும் கெஞ்சவில்லை: துணை செயலாளர் சுதீஷ் தகவல்

தேமுதிக யாரிடமும் கெஞ்சவில்லை: துணை செயலாளர் சுதீஷ் தகவல்
Updated on
1 min read

கூட்டணிக்காகவும், தொகுதிகள் கேட்டும் தேமுதிக யாரிடமும் கெஞ்சவில்லை என அக்கட்சியின் துணைச் செயலாளர் சுதீஷ் தெரிவித்தார்.

தருமபுரியில் கிழக்கு, மேற்கு மாவட்ட தேமுதிக சார்பில் பாப்பாரப்பட்டியில் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில், தேமுதிக துணை செயலாளரும், மண்டல தேர்தல் பொறுப்பாளருமான சுதீஷ் பங்கேற்றார். கூட்டத்துக்கு முன்னதாக நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியது: கூட்டணிக்காகவும், தொகுதிகள் கேட்டும் தேமுதிக யாரிடமும் கெஞ்சவில்லை. கடந்த ஒன்றரை மாதமாக இதர கட்சிகளை எல்லாம்விட நாங்கள்தான் அதிக அளவில் மக்களை சந்தித்து தேர்தல் பணியாற்றி வருகிறோம். தமிழகத்தில் அதிமுக, திமுக-வுக்கு அடுத்தபடியான பெரிய கட்சி தேமுதிகதான்.

கமல்-ரஜினி இருவரும் நடிகர்கள். ஒரே துறையைச் சேர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் இன்று (நேற்று) அவர்கள் சந்தித்திருக்கலாம். பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை தொடர்ந்து உயர்த்தப்படுவதற்கு தேமுதிக சார்பில் கண்டனம் தெரிவிக்கிறோம். மத்திய அரசு எரிபொருள்களின் விலையை குறைக்க வேண்டும். ‘சசிகலா அரசியலில் ஈடுபடுவது தொடர்பாக, ஒரு பெண்ணாக அவருக்கு என் ஆதரவு’ என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா நிகழ்ச்சிகளில் கூறியதால் தேமுதிக-வின் கூட்டணி விவகாரத்தில் எந்த சிக்கலும் இல்லை. வரவிருக்கும் தமிழக சட்டப் பேரவை தேர்தலில் வெற்றி பெற விரும்பும் கட்சி தேமுதிக-வுடன் கூட்டணியில் இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in