ஓய்வூதியர்களுக்கு மருத்துவப்படியை உயர்த்தி வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

ஓய்வூதியர்களுக்கு மருத்துவப்படியை உயர்த்தி வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச் சங்கம் சார்பில் கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

மத்திய அரசுக்கு இணை யாக மாநில அரசு ஓய்வூதியர் கள் மற்றும் குடும்ப ஓய்வூ தியர்களுக்கு மருத்துவப் படியை ரூ.300-லிருந்து ரூ.1,000 என உயர்த்தி வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். முடக்கப்பட்ட 21 மாத நிலுவைத்தொகை மற்றும் அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச் சங்க கரூர் மாவட்டத் தலைவர் பி.சம்பத்குமார் தலைமை வகித்தார்.

மாநில துணைத் தலைவர் கே.எஸ்.பிச்சுமணி, மாநில பொதுச் செயலாளர் எஸ்.பிரபாகரன், அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் து.சாமுவேல்சுந்தரபாண்டியன், மாவட்ட இணைச் செயலாளர் பி.பாலகிருஷ்ணன், பொதுக் குழு உறுப்பினர்கள் சி.கோபால், பி.ராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாவட்டச் செயலா ளர் க.காத்தமுத்து வரவேற்றார். மாவட்டப் பொருளாளர் கே.கே.ராமசாமி நன்றி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in