

திருநெல்வேலி மாவட்ட தொழில்நெறி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டு மையம் சார்பில், பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில், 865 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
முகாமில், 145 நிறுவனங்கள் பங்கேற்று தகுதியான இளைஞர்களை தேர்வு செய்தன. 6,142மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அவர்களில், 865 பேர் தேர்வுசெய்யப்பட்டனர். பணிநியமன ஆணைகளை மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி வழங்கினார். மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் முன்னிலை வகித்தார்.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் தச்சை கணேசராஜா, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இணை இயக்குநர் த.விஜயகுமார், மகளிர் திட்ட அலுவலர் மைக்கேல் அந்தோனி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் குளோரின் எமரால்டு, கல்லூரி முதல்வர் ஜான் கென்னடி வேதநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.