விழுப்புரம் மாவட்டத்தில் 31 தனியார் நிறுவனங்களின் குடிநீர் தரமற்றவை ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தகவல்

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில்  மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டத்தில் 31 தனியார் தண்ணீர் நிறுவனங்களின் குடிநீ்ர் தரமற்றவை என்று மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவினர் தெரிவித்தனர்.

விழுப்புரம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நேற்று மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட குழுதலைவரான எம்பி ரவிக்குமார், இணை தலைவரான ஆரணி எம்பி விஷ்ணுபிரசாத் ஆகியோர்தலைமை தாங்கினர். இக்கூட்டத்தில் மத்திய அரசால் ஊரக வளர்ச்சி துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், பாராளுமன்ற உள்ளூர் தொகுதி மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து இக்குழுவினர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் விரிவாக கேட்டறிந்தனர். இக்கூட்டத்தில் ஆட்சியர் அண்ணாதுரை, எம்எல்ஏ மஸ்தான், மாவட்டவன அலுவலர் அபிஷேக் தோமர், திட்ட இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து எம்பிக்கள் ரவிக்குமார், விஷ்ணுபிரசாத் ஆகியோர் கூறியது:

பிரதமரின் வீடுகட்டும் திட்டத் தில் 50 சதவீத வீடுகள் கட்டி முடிக்கப்படவில்லை. 31 தனியார் தண்ணீர் நிறுவனங்களின் தண்ணீர்பாதுகாப்பானதல்ல என்று கண்டறியப்பட்டுள்ளது. அவைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

கருவாய் புற்றுநோய் அதிகம் பாதித்த மாவட்டங்களில் விழுப்புரம் மாவட்டம் 2-வது இடத்தில் உள்ளது.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறையை கேட்டுக் கொண்டுள்ளோம். பிரதமரின் கிசான் நிதியுதவி திட்டத்தில் நடைபெற்ற முறைகேடில் 80 சதவீத தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். கரோனா தொற்றை கட்டுப்படுத்த சுகாதாரத் துறை சிறப்பாக செயல்பட்டதால், இறப்பு விழுக்காடு ஒரு சதவீதத் திற்கும் குறைவாக உள்ளது என்றனர்.

இக்கூட்டம் குறித்து செஞ்சி எம்எல்ஏ மஸ்தானிடம் கேட்டபோது, " சத்துணவு திட்டத்தில் மசாலா முட்டை அளிக்கப்படவில்லை என்ற புகார் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

வேளாண் துறையில் சொட்டு நீர் பாசன திட்டத்தை செயல் படுத்துவதில் அதிக கெடுபிடி என்ற புகார்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. மேல்மலையனூர் பகுதியில் கடந்த 2017-ம்ஆண்டு முதல் கரும்பு விவசாயிகளுக்கு காப்பீடு வழங்கப்படாதது குறித்தும் இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது" என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in