கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 இடங்களில் மினி கிளினிக் திறப்பு

வேப்பனப்பள்ளி ஒன்றியம் ஆவல்நத்தம் கிராமத்தில் அம்மா மினி கிளினிக்கை மாநிலங்களவை உறுப்பினர் கே.பி.முனுசாமி தொடங்கி வைத்தார்.
வேப்பனப்பள்ளி ஒன்றியம் ஆவல்நத்தம் கிராமத்தில் அம்மா மினி கிளினிக்கை மாநிலங்களவை உறுப்பினர் கே.பி.முனுசாமி தொடங்கி வைத்தார்.
Updated on
1 min read

ஏழை, எளிய மக்களின் சுகாதாரத்தை பாதுகாப்பதே முதல்வரின் நோக்கம் என மாநிலங்களவை உறுப்பினர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நெடுமருதி, ஜிங்களூர், ஆவல்நத்தம் கிராமங்களில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடந்தது. இதில் மாநிலங்களவை உறுப்பினர் கே.பி.முனுசாமி பங்கேற்று மினி கிளினிக்குகளைத் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 44 அம்மா மினி கிளினிக்குகள் கிராமப் பகுதிகளிலும், 6 நடமாடும் மினி கிளினிக்குகளாகவும் அமைக்கப்பட உள்ளது. இதுவரை 36 அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. அம்மா மினி கிளினிக்குகளில் 32,317 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். ஏழை, எளிய மக்களின் சுகாதாரத்தை பாதுகாப்பதே முதல்வரின் நோக்கம். எனவே, பொதுமக்கள் தங்கள் கிராமத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அம்மா மினி கிளினிக்குகளை சிறந்த முறையில் பயன்படுத்தி, சுகாதாரமாக வாழ வேண்டும். இவ்வாறு கே.பி.முனுசாமி பேசினார். இந்நிகழ்வில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மருத்துவர் கோவிந்தன், முன்னாள் எம்பி அசோக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in