

சங்கராபுரத்தில் திருமண நிதிஉதவி திட்டத்தில் 315 பெண்களுக்கு 1 கிலோ 72 கிராம் தங்கம் வழங்கப்பட்டது.
சங்கராபுரத்தில் ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவித் தொகை திட்டத்தின் கீழ் 134 பயனாளிகளுக்கு ரூ.49.25 லட்சம் நிதியுதவியும், தாலிக்கு தலா 8 கிராம் தங்கம் வீதம் மொத்தம் 1 கிலோ 72 கிராம் தங்க நாணயங்களை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார். 181 பயனாளிகளுக்கு ரூ.55.73 லட்சம் மதிப் பிலான இலவச வீட்டுமனை பட் டாக்களையும் நேற்று வழங்கினார்.
மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் ப.மோகன் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ரா.குமரகுரு, அ.பிரபு ஆகி யோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியது:
தமிழக முதல்வரின் சீரிய நடவடிக்கையினால் தமிழ்நாடு முழுவதும் வீடுகள் இல்லாமல் அரசு புறம்போக்கு மற்றும் தரிசு நிலங்களில் நீண்டகாலமாக வசித்து வரும் ஏழை, எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டுஇலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி தற்போது அனை வருக்கும் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி துணை ஆட்சியர் காந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.