அகத்தீஸ்வரர் கோயிலில் புதிய தேர் வெள்ளோட்டம்

வெம்பாக்கம் அடுத்த புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள அகத்தீஸ்வரர் கோயிலில் நேற்று புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.
வெம்பாக்கம் அடுத்த புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள அகத்தீஸ்வரர் கோயிலில் நேற்று புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

தி.மலை மாவட்டம் வெம்பாக் கம் அடுத்த புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள அகத்தீஸ்வரர் கோயில் தேர் சிதிலமடைந்தது. அதனை புதுப்பிக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறையிடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதன்படி, பொதுமக்கள் பங்களிப்புடன் ரூ.65 லட்சம் மதிப்பிலான புதிய தேர் வடிவமைக் கப்பட்டது. இதையடுத்து, புதிய தேர் வெள்ளோட்டம் நேற்று நடைபெற்றது. தேரை வடம் பிடித்து இழுத்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தொடங்கிவைத்தார். மாட வீதியில் தேர் வலம் வந்தது. முன்னதாக, புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்களுடன் வேத மந்திரங்கள் முழங்கியபடி கோயிலை வலம் வந்த சிவாச் சாரியார்கள், பின்னர் புனித நீரை புதிய தேர் மீது ஊற்றினர். மேலும், மகா தீபாராதனை காண்பிக்கப் பட்டது.

இதில், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in