

புதிய தமிழகம் கட்சி நிகழ்ச்சிகளில் அதன் தலைவர் டாக்டர் கிருஷ்ண சாமியின்மகனான டாக்டர் ஷியாம் முன்னிலைப்படுத்தப்பட்டு வருகிறார்.
தமிழக வளர்ச்சி அரசியல் மாநாடு’ என்ற தலைப்பில் முதற்கட்ட பிரச்சார பொதுக்கூட்டங்களை அக்கட்சி நடத்தி வருகிறது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூரிலும், திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டையிலும் நடத்தப்பட்ட மாநாடுகளில் திராவிட கட்சிகளைப்போல் கூட்டம்காணப்பட்டது. இக்கூட்டங்களில் கிருஷ்ணசாமியின் மகன் டாக்டர்ஷியாமுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. கிருஷ்ணசாமியும், அவரது மகனும் சரிசமமாக பிரம்மாண்ட இருக்கைகளில் அமரவைக்கப்பட்டிருந்தனர். சுவரொட்டிகள், பதாகைகளிலும் ஷியாமுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.கட்சியில் முக்கிய பேச்சாளராகவும்அவர் தன்னை உயர்த்தியிருக்கிறார்.
``கடந்த 60 ஆண்டுகளாகதமிழகத்தில் மாறிமாறி ஆட்சியிலிருந்த திமுகவும், அதிமுகவும் உண்மையிலேயே மக்களுக்கு நன்மை செய்திருந்தால், 2 கட்சிகளும் கூட்டணியின்றி தேர்தலை சந்திக்க வேண்டியதுதானே. திராவிடர்கள் என்ற போர்வையில்இவர்கள் 60 ஆண்டுகளாக சாதி, மத பிரிவினைகளை அதிகப்படுத்திவிட்டனர். தமிழக மக்களுக்கு பாகுபாடின்றி இவர்கள் நன்மை செய்திருந்தால் எல்லோரும் இவர்களை ஏற்றுக் கொண்டிருப்பார்கள். ஆனால், பிரிவினையும், பயஉணர்வும், சுயலாபமுமே இவர்களின் அரசியல் முதலீடு. இதைமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்று ஷியாம் பேசினார்.கட்சியில் ஷியாம் முன்னிலைப்படுத்தப்படுவது குறித்து டாக்டர் கிருஷ்ணசாமியிடம் கேட்டபோது மவுனத்தையே பதிலாக அளித்தார்.