Regional01
மத்திய அரசு விருது பெற்ற மாணவிக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் பாராட்டு
தேசிய அளவில் தேசிய பாலபவன் மூலம் புதிய கண்டுபிடிப்பு பிரிவில் மத்திய அரசு சார்பில் பால விருது வழங்கப்படுகிறது. இந்த விருது நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி சீ.பா.மதுரிதாவுக்கு முதல்வர் பழனிசாமி வழங்கினார். விருது பெற்ற மாணவி மதுரிதா, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
இந்நிகழ்ச்சியில் ஜவஹர் சிறுவர் மன்ற திட்ட அலுவலர் மா. சிவக்குமார் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
