பல்வேறு காரணங்கள் மற்றும் புகார்களால் நிலுவையில் உள்ள பணிகளை செய்யுங்கள் அரசு ஊழியர்களுக்கு சட்டமன்ற பொதுக்கணக்கு குழு தலைவர் வலியுறுத்தல்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்ற பொதுக்கணக்கு குழு ஆய்வு கூட்டம் நடந்தது.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்ற பொதுக்கணக்கு குழு ஆய்வு கூட்டம் நடந்தது.
Updated on
1 min read

அரசின் திட்டங்களை செயல்படுத்த அனைத்து விவசாயிகளும் ஆர்வத்துடன் முன்வர வேண்டும் என சட்டமன்ற பொதுக்கணக்கு குழு தலைவர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்ற பொதுக்கணக்கு குழு ஆய்வு கூட்டம் நடந்தது. தமிழ்நாடு சட்டமன்ற பொதுக் கணக்கு குழு தலைவர் (பொறுப்பு) பழனிவேல் தியாகராஜன் தலைமை தாங்கினார். சட்டமன்றப் பேரவை செயலாளர் சீனிவாசன், கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடலூர் மாவட்டத்தில் பல்வேறு அரசு துறைகளில் நடைபெற்ற பணிகள் தொடர்பாக சட்டமன்றபொதுக் கணக்குகுழு உறுப்பினர் கள் தணிக்கை ஆய்வு மேற்கொண் டனர். இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் நெய்வேலி சபாஇராஜேந்திரன், திட்டக்குடி கணேசன், புவனகிரி சரவணன், எஸ்பி அபிநவ், மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) கார்த்திக்கேயன், திட்ட இயக்குநர் (பொறுப்பு)காஞ்சனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து சட்டமன்ற பொதுக்கணக்கு குழுவினர் கூறியது: பல்வேறு காரணங்கள் மற்றும் புகார்களால் நிலுவையில் உள்ள பணிகளை சரி செய்ய வேண்டும். அரசு ஒதுக்கீடு செய்யும் நிதியை சரிவர பயன்படுத்தி திட்டங்களை மக்களின் பயன்பாட்டிற்கு உரியநேரத்தில் கொண்டு வரவும்அனைத்து துறை முதன்மை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மக்களுக்கு தேவையான புதிய திட்டங்களை தயார் செய்து அரசுக்கு பரிந்துரை செய்யவும் அறிவுறுத்தப்பட்டது என்று தெரிவித்தனர்.

விழுப்புரம்

தணிக்கையில் சுட்டிக் காட் டப்பட்ட திட்டம் திருத்தப் பட்டுள்ளதா என ஆய்வு மேற் கொண்டுவருகிறோம். அரசின் திட்டங்களை செயல்படுத்த அனைத்து விவசாயிகளும் ஆர்வத் துடன் முன்வரவேண்டும் என்று கூறினார்.

இந்த ஆய்வின் போது ஆட்சியர் அண்ணாதுரை, திட்ட இயக்குநர் மகேந்திரன், சட்டபேரவை துணை செயலாளர் ரேவதி, வேளாண்மை இணை இயக்குநர் ரமணன், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் இந்திரா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) பெரியசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in