

கொலை வழக்கில் தொடர்புடைய இருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல் அருகே பாலகிருஷ் ணாபுரத்தைச் சேர்ந்தவர் கலையரசன். இவர் ஒரு வாரத்துக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். தாலுகா போலீஸார் வழக்குப்பதிவு செய்து பாலகிருஷ்ணாபுரம் ஐயப்பன்(34), பெரியகோட்டை சொக்கன்(28) ஆகி யோரை கைது செய்தனர்.
இந்நிலையில் இவர்களை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய திண்டுக்கல் ஆட்சியருக்கு மாவட்டக் காவல் கண்காணிப் பாளர் ரவளிபிரியா பரிந்துரை செய்தார்.
அதையேற்று ஐயப்பன், சொக்கன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய திண்டுக்கல் ஆட்சியர் மு.விஜயலட்சுமி உத்தரவிட்டார்.
இருவரையும் போலீஸார் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.