ராமநாதபுரம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி நாளை முதல் தேதி தொடக்கம்

ராமநாதபுரம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி நாளை முதல் தேதி தொடக்கம்
Updated on
1 min read

ராமநாதபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் கடந்த 10 மாதங்களாக நிறுத்தப்பட்டி ருந்த போட்டித் தேர்வுகளுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நாளை (பிப்.18) முதல் மீண்டும் தொடங்குகிறது.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் எஸ்.மதுக்குமார் மற்றும் தொழில் நெறிவழி காட்டு அலுவலர் அருண்நேரு ஆகியோர் கூறியதாவது:

ராமநாதபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் போட்டித் தேர்வுகளுக்கு தயாராவோருக்கு சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வரு கின்றன. போட்டித்தேர்வுகளில் சிறப்பிடம் பெற்று பணியில் இருக்கும் வல்லுநர்கள் மூலம் போட்டித் தேர்வு வகுப்புகள் நடத்தப்படுவதால் பலரும் அரசுப் பணிக்குத் தேர்வாகியுள்ளனர்.

கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் முதல் கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையால் போட்டித்தேர்வு சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவில்லை. தற்போது கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் தளர்வுகள் அறி விக்கப்பட்டுள்ளன.

நாளை முதல் (18-ம் தேதி)போட்டித் தேர்வு வகுப்பு தொடங்குகிறது. வகுப்புகள் காலை 10 முதல் பகல் 1 மணி வரை நடைபெறும். இவ்வகுப்புகளில் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித் தவர்களும், தேர்வுகளுக்கு தயாரா வோரும் கலந்துகொள்ளலாம் எனத் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in