காட்டுமன்னார்கோவில் அருகே குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

காட்டுமன்னார்கோவில் அருகே மேலப்பழஞ்சநல்லூரில் குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காட்டுமன்னார்கோவில் அருகே மேலப்பழஞ்சநல்லூரில் குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Updated on
1 min read

காட்டுமன்னார்கோயில் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

காட்டுமன்னார்கோவில் அருகே மேலப்பழஞ்சநல்லூர் கீழத்தெருவில் உள்ள 8-வது வார்டில்சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அப்பகுதியில் தண்ணீர் செல்லும்குழாய் பழுதடைந்தது. கடந்தமூன்று மாதங்களாக அப்பகுதிக்கு குடிநீர் செல்லவில்லை. பொதுமக் கள் பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவ டிக்கை எடுக்கவில்லை. இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் நேற்று காலி குடங்களுடன் சிதம்பரம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவ லறிந்து சம்பவ இடத்துக்கு சென்றகாட்டுமன்னார்கோவில் போலீ ஸார் பொதுமக்களிடம் சமாதானம் பேசினர்.

ஆனாலும், ‘அதிகாரிகள் வரும்வரையில் நாங்கள் காத்திருக்கி றோம்’ என்று கூறி அந்த இடத்திலேயே சாலை ஓரமாக பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். அதன் பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். சாலை மறியல் போராட்டத்தினால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in