

அப்போது அவர்கள் காவலர் இளமாறனை தகராறு செய்து தாக்கினர். இதில் காயமடைந்த அவர், ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, பஜார் போலீஸார் மோட்டார் சைக்கிளில் வந்த கூரியூரைச் சேர்ந்த சிவமுருகன், ரபீக் முகம்மது, பிலால் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதில் ரபீக் முகம்மது பெருநாழி காவல் நிலையத்தில் காவலராக உள்ளார். இவர் மீது ஏற்கெனவே துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், அவர் பணிக்குச் செல்லாமல் இருந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.