

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்துப் பேசினார்.
அவர் பேசியதாவது:
‘வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயரக் குடி உயரும், குடி உயரக் கோல் உயரும், கோல் உயரக் கோன் உயர்வான்’ என்ற அவ்வையாரின் பாடல் வரிகளை குறிப்பிட்டு, ‘விவசாய நிலத்தின் வரப்பை உயர்த்தினால், வயலில் நீர் அதிக அளவில் தங்கும். அதிகமாக நீர் தங்கினால் நெல் விளைச்சல் அதிகமாகும். நெல் விளைச்சல் நன்றாக இருந்தால் மக்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
எங்கே மக்கள் வறுமையின்றி மகிழ்ச்சியாக இருக்கிறார்களோ, அந்த அரசே சிறப்பான அரசாங்கமாக விளங்கும். அப்படி சிறந்த அரசை ஆளும் மன்னன் நற்பெயர் பெறுவான்’ என்ற பொருளையும் விளக்கினார்.
நீராதாரங்களை தமிழக விவசாயிகள் சிறப்பாக பயன்படுத்தி வருகின்றனர். நீர் மேலாண்மையில் தமிழக விவசாயிகள் சிறந்து விளங்குவதால் உணவு தானிய உற்பத்தியில் தமிழகம் சாதனை படைத்துள்ளது.
இதற்காக தமிழக விவசாயிகளை பாராட்டுகிறேன் என்றார் மோடி.
அவ்வையார் பாடலுடன் விவசாயிகளுக்குப் பிரதமர் பாராட்டு தெரிவித்ததை மிகுந்த வரவேற்பைப் பெற்றது.