கடலூரில் பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து ஆய்வு

கடலூர் அருகே உள்ள இரண்டாயிரம் விளாகம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியின் பதிவாளர் சக்தி சரவணன் ஆய்வு மேற்கொண்டார். அருகில் கடலூர் மண்டல இணைப்பதிவாளர் நந்தகுமார், கடலூர் மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண் இயக்குநர் இளஞ்செல்வி.

Updated on
1 min read

கடலூர் பகுதியில் வேளாண் கூட்டுறவு சங்கங்களில் பயிர்க் கடன் தள்ளுபடி குறித்து மாநில கூட்டு றவு வங்கியின் பதிவாளர் ஆய்வு செய்தார்.

கூட்டுறவு சங்களில் ரூ. 12,110 கோடி பயிர் கடனை தமிழக அரசு தள்ளுபடி செய்துள்ளது. இதனைதொடர்ந்து கூட்டுறவு சங்கங்க ளில் கடன் தள்ளுபடிக்கு தகுதியுள்ளவிவசாயிகளின் பட்டியலை தயாரிக்க துணைப் பதிவாளர்கள்தலைமையில் 3 பேர் கொண்டகுழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டத்தில் இக்குழுக் களின் பணிகள், பயிர்க் கடன்ரத்து செய்வதற்கான சான்றிதழ்வழங்குவது குறித்து நேற்று முன்தினம் தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியின் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநரான சக்திசரவணன் ஆய்வு செய்தார்.

கடலூர் அருகே உள்ள இரண்டாயிரம் விளாகம் மற்றும் கரைமேடு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் விவசாய கடன் பெற்ற பயனாளிகளின் பதிவேடுகளை நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

கடலூர் மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் நந்தகுமார், கடலூர் மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண் இயக்குநர் இளஞ் செல்வி, துணை பதிவாளர்கள் சண்முகம், ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட பலர் உடனிருந் தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in