

சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் பழனிசாமி முன்னிலையில், கல் லணைக் கால்வாய் புதுப்பித்தல் மற்றும் புனரமைத்தல் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.
இதையொட்டி, தஞ்சாவூர் அருகே சூரக்கோட்டையில் கல்லணைக் கால்வாய் அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் ம.கோவிந்தராவ் கலந்து கொண்டு, விவசாயிகளுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் சி.வி.சேகர், மா.கோவிந்தராசு, புதுக்கோட்டை மாவட்ட வரு வாய் அலுவலர் சரவணன் மற்றும் பொதுப்பணித் துறை பொறியாளர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
திட்டப் பணிகள்: கல்லணையிலி ருந்து விநாடிக்கு 4,200 கனஅடி நீர் வழங்கும் வகையில் கல்லணைக் கால்வாய் வடிவமைக்கப்பட்டது. இதன்மூலம் 2,27,472 ஏக்கர் விளை நிலங்கள் நேரடியாகவும், 694 ஏரிகள் மூலமாக 81,942 ஏக்கர் விளைநிலங்கள் மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகின்றன.
தற்போது தொடங்கி வைக் கப்பட்டுள்ள திட்டத்தின் கீழ், ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் நிதி உதவியுடன் ரூ.2,639.15 கோடி மதிப்பீட்டில் 16 தொகுப்புகளாக திறன்மிக்க நீர்மேலாண்மை பணிகளை செயல்படுத்த தமிழக அரசால் திட்டமிடப்பட்டது. இதன் மூலம் கல்லணைக் கால்வாய், கிளைக் கால்வாய், பிரிவு கால்வாய் என மொத்தம் 1,232 கி.மீ நீளத்துக்கு பணிகள் மேற்கொள்ளப்பட உள் ளன.
இதில், புனரமைக்கும் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின் மூலம் தற்போதைய 45 சதவீத நீர் வழங்கும் திறன், 61 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளது. 1,714 மதகுகள் திரும்பக் கட்டும் பணியுடன், 29 மதகுகள் சீரமைக்கும் பணி, 26 கால்வாய் பாலம் திரும்பக் கட்டும் பணி, 16 கால்வாய் பாலம் சீரமைக்கும் பணி, 108 கீழ் குமிழி அமைப்பு திரும்பக் கட்டும் பணி, ஒரு கீழ் குமிழி அமைப்பு சீரமைக்கும் பணி, 28 நீரொழுங்கிகள் திரும்பக் கட்டும் பணி, ஒரு புதிய நீரொ ழுங்கி கட்டும் பணி, 20 பாலங்கள் கட்டும் பணி, 10 பாலங்கள் சீரமைக்கும் பணி ஆகியவை நடைபெற உள்ளன.
மேலும், கல்லணைக் கால்வாயில் படுகை மற்றும் சாய்வு தளத்தில் லைனிங் அமைக்கும் பணியும், 403 ஏரிகளை புனர மைக்கும் பணிகளும் நடைபெற உள்ளன. இத்திட்டத்தை 3 ஆண்டுகளில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதை செயல்படுத்துவதன் மூலமாக தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் பயனடை வார்கள். 16 தொகுப்புகளாக நடைபெறவுள்ள இத்திட்டத்துக்கு முதற்கட்டமாக 5 தொகுப்புகளுக்கு ரூ.1,036.70 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.