

திருநெல்வேலி மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது. மாவட்டப் பொருளாளர் சவுந்தரராஜன் தலைமை வகித்தார்.
மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் அருண்குமார் வரவேற்றார். மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் ஜெகநாதன் என்ற கணேசன், நிர்வாகிகள் ஜெரால்டு, அழகானந்தம், செல்வராஜ், முத்துக் குட்டி பாண்டியன் சின்னத்துரை உட்பட பலர் கலந்துகொண்டனர்.