

ராணிப்பேட்டையில் இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த பெயின்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அவரக்கரை மாதா கோயில் தெருவைச் சேர்ந்தவர் பெயின்டர் வீரா (24). இவர், நேற்று முன்தினம் தனது இரு சக்கர வாக னத்தில் ராணிப்பேட்டை பஜாருக்கு சென்றுவிட்டு, மீண்டும் வீடு திரும்பினார். அப்போது, அவரக்கரை பகுதியில் வந்தபோது, நிலை தடுமாறி கீழேவிழுந்ததில் சம்பவ இடத்தி லேயே வீரா பரிதாபமாக உயிரிழந் தார். இது குறித்து சிப்காட் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.