‘மனதில் அமைதி நிலவ யோகா அவசியம்’

‘மனதில் அமைதி நிலவ யோகா அவசியம்’

Published on

நாமக்கல் மாவட்ட மனநல திட்டத்தின் சார்பில் நாமக்கல் வடக்கு போக்குவரத்து அலுவலகத்தில் மன நல விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட தலைமை மருத்துவமனை மனநல மருத்துவர் வ.முகிலரசி பேசியதாவது:

மனச்சோர்வு என்பது ஒரு நோய் இது பரம்பரையாக வருவதாக இருக்கலாம். மன அழுத்தத்தினாலும், மன இறுக்கத்தினாலும் வரலாம். மனநல பாதிப்புகள் மிதமான மனநோய், தீவிரமான நோய் என இரு வகை உள்ளது. 5 நபர்களில் ஒருவருக்கு மன நோய் உள்ளது.

இருதய நோய்க்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் மனநோய் உள்ளது. மதுவிற்கு அடிமையான சிலரை மீட்பது சாத்தியம். பிறவகை போதைக்கு அடிமையானவர்கள் அப்பழக்கத்தில் இருந்து மீட்பது மிகவும் கடினம். தியானம், யோகா பயிற்சி, மூச்சுப் பயிற்சி போன்றவை மன இறுக்கம் தளரவும், மனதில் அமைதி நிலவவும் உதவும், என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in