

பரமக்குடியில் வட்டாரப் போக்கு வரத்து அலுவலகம் சார்பில் சாலைப் பாதுகாப்பு மாத விழா நடைபெற்று வருகிறது. இவ்வி ழாவையொட்டி கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜ்குமார் முகாமுக்கு தலைமை வகித்தார். போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் முன்னிலை வகித்தார். மீனாட்சி மிஷன் மருத்துவமனை மருத்துவர் தனலட்சுமி தலைமையிலான குழுவினர் சிகிச்சை அளித்தனர். கண் அறுவைச் சிகிச்சை செய்யும் நிலையில் இருந்தவர்களை மருத்து வமனைக்குப் பரிந்துரைத்தனர். முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், ஒட்டுநர்கள் கலந்து கொண்டனர்.
என்எஸ்எஸ் அலுவலர் அய்யப்பன் நன்றி கூறினார்.