

கறம்பக்குடி அருகே குளந்திரான்பட்டு ஊராட்சி கட்டுவான்பிறை கிராமத்தில் உள்ள புதுக்குளம், மயானம் மற்றும் அரசு தொடக்கப் பள்ளி ஆகியவற்றின் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று தர்ணாவில் ஈடுபட்டனர்.
கட்சியின் நிர்வாகிகள் ஆர்.கிருஷ்ணன், ஏ.கருப்பையா ஆகியோர் தலைமை வகித்தனர். தொழிலாளர் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் எஸ்.சங்கர், கட்சியின் ஒன்றியச் செயலாளர் டி.அன்பழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.