

சேலத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஆட்டோ ஓட்டுநர்கள், ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பெட்ரோல் விலை நேற்று ரூ.91.23, டீசல் விலை ரூ.84.30 என அதிகபட்ச விலையாக விற்பனையானது.
ஆர்ப்பாட்டம்
போராட்டத்தின் போது ஆட்டோவை கயிறு கட்டி இழுத்துக் கொண்டும், கைகளில் திருவோடு ஏந்தியபடியும், ஆட்டோ ஓட்டுநர்கள் பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தை கண்டித்து முழக்கமிட்டபடி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ஆட்டோ ஓட்டுநர்கள் கூறும்போது, ‘பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளதால், ஆட்டோ தொழில் மிகவும் நசிந்து விட்டது.
ஆட்டோ தொழிலாளர் களின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை சரிந்து வரும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் அதிகப்படியாக வரியை விதித்து விலையை உயர்த்தி உள்ளது.
எனவே, எரிபொருள் விலை ஏற்றத்தை மத்திய, மாநில அரசுகள் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.