விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி
Updated on
1 min read

32-வது சாலை பாதுகாப்பு மாத விழாவை முன் னிட்டு, தஞ்சாவூர், பெரம்பலூர் ஆகிய இடங்களில் நேற்று விழிப்புணர்வு பேரணியும், காரைக் காலில் ஓட்டுநர், நடத்து நர்களுக்கு இலவச மருத் துவ முகாமும் நேற்று நடைபெற்றன.

தஞ்சாவூரில் பேர ணியை மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்தி லிங்கம், ஆட்சியர் ம.கோவிந்தராவ் ஆகி யோர் தொடங்கி வைத்த னர். இந்நிகழ்வில், எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்சய், வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பெரம்பலூர் துறைமங்கலத்தில் நடைபெற்ற விழிப்பு ணர்வு பேரணியை நெடுஞ்சாலை துறை கோட்டப் பொறியாளர் சர்புதீன் தொடங்கி வைத்தார்.

காரைக்காலில் நடைபெற்ற இலவச மருத் துவ முகாமை வட்டார போக்குவரத்து அதிகாரி கலியபெருமாள் தொடங்கி வைத்தார். கார், வேன், பேருந்து உள்ளிட்ட வாகனங்களின் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டனர். தொடக்க நிகழ்வில், மண்டல எஸ்.பி ஆர்.ரகுநாய கம், போக்குவரத்து ஆய்வாளர் மரிய கிறிஸ்டியன் பால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in