

தஞ்சாவூரில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட ரேஷன் கடை பணியாளர்கள் 110 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையிலுள்ள கூட்டுறவு சங்கங் களின் இணைப் பதிவாளர் அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தினர் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு, மாநிலத் தலைவர் சா.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மாநில இணைச் செய லாளர் எம்.ராமலிங்கம், மாவட்டத் தலைவர் எஸ்.அறிவழகன், பொரு ளாளர் ஜெ.ராமலிங்கம், துணைத் தலைவர் கே.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இப்போராட்டத்தில், ஊதிய உயர்வு குழு அறிக்கையைப் பெற்று, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்துக்கு இணையான ஊதியத்தை நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு வழங்க வேண்டும்.
பொது விநியோகத் திட்டத்துக்கு தனித் துறை உருவாக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் பங்கேற்ற 50 பெண்கள் உட்பட 110 பேரை போலீஸார் கைது செய்தனர்.