கோழி வளர்ப்பு நிறுவனம் நடத்தி மோசடிதம்பதிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

கோழி வளர்ப்பு நிறுவனம் நடத்தி மோசடிதம்பதிக்கு  3 ஆண்டுகள் சிறை தண்டனை
Updated on
1 min read

இந்த நிறுவனத்தில் ரூ.1.50 லட்சம் முதலீடு செய்தால், 'ஷெட் அமைத்து, 200 நாட்டு கோழிக்குஞ்சுகளை அளிக்கப்படும், மாதம் ரூ.6 ஆயிரம் வீதம் 36 மாதங்களுக்கு பராமரிப்புச் செலவு அளிக்கப்படும், ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் போனஸ் வழங்கப்படும் என கவர்ச்சிகரமான திட்டத்தை அறிவித்தனர். இதை நம்பி 9 பேர் மொத்தம் ரூ.17.68 லட்சம் முதலீடு செய்தனர். ஆனால், குறிப்பிட்டபடி பராமரிப்புச் செலவு, போனஸ் போன்றவற்றை வழங்கவில்லை.

இதையடுத்து, சங்ககிரியை அடுத்த அம்மாபாளையத்தைச் சேர்ந்த எஸ்.சுப்பிரமணியன் ஈரோடு பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார், செல்லமணி, ராமலிங்கம் ஆகியோரைக் கைது செய்தனர். இந்த வழக்கு கோவை டான்பிட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், குற்றம்சாட்டப்பட்ட இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10.18 லட்சம் அபராதம் விதித்ததுடன், அதில் ரூ.10 லட்சத்தை முதலீட்டாளர்களுக்கு பிரித்து வழங்குமாறு சிறப்பு நீதிபதி ஏ.எஸ்.ரவி நேற்று உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in