திமுக தலைவர் ஸ்டாலின் நாளை விருத்தாசலம், சிதம்பரத்தில் பிரச்சாரம்

திமுக தலைவர் ஸ்டாலின் நாளை விருத்தாசலம், சிதம்பரத்தில் பிரச்சாரம்
Updated on
1 min read

திமுக தலைவர் ஸ்டாலின் நாளை விருத்தாசலம், சிதம்பரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.

கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம், மேற்கு மாவட்ட திமுக செயலாளர் வெ..கணேசன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:

திமுக தலைவர் ஸ்டாலின் விருத்தாசலம் ராணி மஹால் எதிரில் உள்ள கலைஞர் திடலில் நாளை காலை 8 மணிக்கு நடைபெறும் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

இதே போல் நாளை மதியம் 1 மணி அளவில் சிதம்பரம் புறவழிச்சாலை சி.தண்டேஸ்வரநல்லூர் ஊராட்சி கலைஞர் திடலில் நடைபெறும் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார்.

பொதுமக்களிடம் குறைகேட்டு கோரிக்கை மனுக்களை பெற உள்ளார்.

இந்த நிகழ்ச்சிகளில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி திமுக நிர்வாகிகள், அனைத்து அணி நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in