

தஞ்சாவூர் விதை ஆய்வு துணை இயக்குநர் கோ.வித்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பு பருவத்துக்கு தேவையான விதைகளை விவசாயி கள் வாங்கும்போது கவனமாக இருக்க வேண்டும். விதையின் ரகம், நிலை, குவியல் எண், காலாவதி நாள் மற்றும் பருவம் ஆகியவற்றை சரிபார்த்து, உறுதிசெய்து வாங்க வேண்டும். மேலும், விதைகளை வாங்கியதற்கான பில் மற்றும் கொள்கலன் அட்டை ஆகியவற்றை பயிர் சாகுபடி முடியும் வரை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.
உரிமம் பெறாத கடை மற் றும் நபர்களிடம் விதைகளை வாங்கக் கூடாது. உரிமம் பெற்ற விற்பனையாளர்கள் விதைகளை விற்பனை செய்யும் போது, விற்பனை செய்யப்படும் விதையின் விவரத்தை விற் பனை ரசீதில் குறிப்பிட்டு, விவசாயியின் கையொப்பம் மற்றும் விற்பனையாளர் கையெழுத் துடன் வழங்க வேண்டும். இதில், ஏதேனும் குறைபாடுகள் காணப்பட்டால், விதை விற்பனையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். உரிமம் இல்லாமல் விற்பனை செய்தாலோ, காலாவதியான விதைகளை விற்பனை செய்தாலோ, விற்பனை ரசீது தர மறுத்தாலோ சட்ட விதிமுறை களின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.