கலசப்பாக்கம் அருகே நடந்த நிகழ்ச்சியில் பெண் ஒருவருக்கு நலத்திட்ட உதவியை வழங்கிய எம்எல்ஏ பன்னீர்செல்வம்.
கலசப்பாக்கம் அருகே நடந்த நிகழ்ச்சியில் பெண் ஒருவருக்கு நலத்திட்ட உதவியை வழங்கிய எம்எல்ஏ பன்னீர்செல்வம்.

கலசப்பாக்கம் தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Published on

அதிமுக மகளிர் பாசறை பூத் கமிட்டி அமைப்பதற்கான ஆலோ சனை கூட்டம் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-ம் ஆண்டு பிறந்த நாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த பாடகம், காப்பலூர் மற்றும் காஞ்சியில் நடைபெற்றது.

இதில், எம்எல்ஏ பன்னீர் செல் வம் கலந்து கொண்டு, தேர்தல் நேரத்தில் மகளிர் கமிட்டி நிர்வாகிகள் மேற்கொள்ள வேண் டிய பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினர். பின்னர் அவர், 17 பெண்களுக்கு அம்மா ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆணை மற்றும் நூற்றுக்கணக்கான பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதில், வட்டார வளர்ச்சி அலுவலர் எழிலரசன், வீட்டு வசதி சங்க துணை தலைவர் பொய்யா மொழி, முன்னாள் எம்எல்ஏ நளினி மனோகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in