

முதல்வர் பழனிசாமியின் சென்னை மற்றும் சேலம் வீடுகளில் வெடிகுண்டு இருப்பதாக சேலம் மாநகர காவல்துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் நேற்று தொலைபேசி மூலம் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து சேலத்தில் உள்ள முதல்வரின் வீட்டில் சேலம் மாநகர போலீஸார் மற்றும் வெடி குண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர். சோதனையில் வெடிகுண்டு இல்லை என்பது தெரியவந்தது. மேலும், விசாரணையில், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இருந்து சேகர் என்பவர் அலைபேசியில் பேசியது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் மிரட்டல்
அங்கிருந்த போலீஸார் ‘வேலை தொடர்பான மனுக்களை ஆட்சியரிடம்தான் கொடுக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளனர். ஆனால் அந்த நபர் டிஜிபிடம்தான் மனு கொடுப்பேன். எனக்கு அரசு வேலை கொடுக்காவிட்டால் ஜெயலலிதா நினைவிடத்தை பெட்ரோல்குண்டு வீசி தகர்த்துவிடுவேன் என தெரிவித்துள்ளார். போலீஸார் விசாரணையில் அந்த நபர் கொருக்குப்பேட்டையை சேர்ந்த, மணிகண்ட பிரசாத் என்பது தெரிந்தது. இதையடுத்து, போலீஸார் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.