கரிவலம்வந்தநல்லூரில் கூட்டுறவு வங்கி கிளை திறப்பு

கரிவலம்வந்தநல்லூரில் மத்திய கூட்டுறவு வங்கி புதிய கிளையை தொடங்கிவைத்த அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி, வாடிக்கையாளருக்கு வங்கிக் கணக்கு புத்தகத்தை வழங்கினார்.
கரிவலம்வந்தநல்லூரில் மத்திய கூட்டுறவு வங்கி புதிய கிளையை தொடங்கிவைத்த அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி, வாடிக்கையாளருக்கு வங்கிக் கணக்கு புத்தகத்தை வழங்கினார்.
Updated on
1 min read

கரிவலம்வந்தநல்லூரில், திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக் கிளையை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி திறந்துவைத்தார்.

விழாவுக்கு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கணேசராஜா தலைமை வகித்தார்.

அமைச்சர் கூறியதாவது:

திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் 31.03.2020-ல் செலுத்தப்பட்ட மொத்த பங்கு மூலதனம் ரூ. 7,738.07 லட்சம். 31.01.2021ல் செலுத்தப்பட்ட மொத்த பங்கு மூலதனம்ரூ. 8,102.84 லட்சம். இதில், தமிழகஅரசு முதலீடு செய்துள்ள பங்குத்தொகை ரூ.1,150.00 லட்சம். பொதுமக்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் சேகரிக்கப்பட்ட வைப்புகள் ரூ.784.83 கோடியாக உள்ளது. நடப்பு ஆண்டில் நேரடிக் கடன்கள் மற்றும் இணைப்புச் சங்கங்கள் மூலம் ரூ.878.55 கோடி கடன்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.

அ.மனோகரன் எம்எல்ஏ, மத்தியகூட்டுறவு வங்கி இணைப்பதி வாளர் சுபாஷினி, நபார்டு வங்கிமண்டல மேலாளர் சலீமா, துணைப் பதிவாளர் பாலகிருஷ்ணன், பொதுமேலாளர் செல்லப்பாண்டியன், கூட்டுறவு அச்சக தலைவர் கண்ணன், நெசவாளர் கூட்டுறவு சங்க தலைவர் ஆறுமுகம், அதிமுக மாவட்டச் செயலாளர் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in