சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மருத்துவக்கல்லூரி இயக்குநர் தலைமையிலான குழு ஆய்வு

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி.
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி.
Updated on
1 min read

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை தமிழக அரசின்மருத்துவக் கல்லூரி இயக்குநர் டாக்டர் நாராயணபாபு தலைமையி லான குழுவினர் ஆய்வு செய்தனர்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை தமிழக அரசுகடந்த 2013-ம் ஆண்டு கையகப்படுத் தியது. ஆனாலும், இந்த பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட ராஜா முத் தையா மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு தொடர்ந்து பிற தனியார் கல்லூரிகளைப் போலவே கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

பிற அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணத் தையே தங்களுக்கும் வசூலிக்க வேண்டும் என்று கூறி கடந்த 58 நாட்களாக மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் தமிழக அரசுஉயர்க்கல்வித்துறையில் இருந்துராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை சுகாதாரத் துறைக்கு மாற்றி உத்தரவிட்டது. தொடர்ந்து சுகாதாரத்துறை, ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக அறிவிப்பை வெளியிட்டு அரசு கட்டணமே பெறப்படும் என்று அறிவித்தது. இதையடுத்து மாணவர்களின் போராட்டம் வாபஸானது.

இந்த நிலையில் நேற்று தமிழக அரசின் மருத்துவக் கல்லூரி இயக்குநர் டாக்டர் நாராயணபாபு தலைமையிலான 15 பேர் கொண்ட குழுவினர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று வருகை தந்தனர். இக்குழுவினர் 3 நாட்கள் தங்கியிருந்து மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி, நர்சிங் கல்லூரி ஆகியவற்றில் ஆய்வு செய்ய உள்ளனர்.

பாண்டியன் எம்எல்ஏ மனு

சுகாதாரத் துறை அமைச்சரின் சிறப்பு உதவியாளர் மணிக்கண் ணன், அண்ணாமலை பல்கலைக் கழக துணை வேந்தர் முருகேசன், பதிவாளர் ஞானதேவன் ஆகியோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in