

பாசனத்துக்கு தண்ணீர் திறக்கக்கோரி குளித்தலையில் பொதுப்பணித்துறை அலுவலகத்தை காய்ந்த வாழைத்தார்களுடன் விவசாயிகள் நேற்று முற்றுகையிட்டனர்.
கரூர் மாவட்டம் குளித்தலையில் தென்கரை பாசன விவசாயிகள், பாசனத்துக்கு தண்ணீர் திறக்காததால் வாழைகள் காய்ந்துப் போவதாகக்கூறி, பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி பொதுப்பணித் துறை ஆற்றுப் பாதுகாப்பு உப கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை காய்ந்த வாழைத்தார்களுடன் நேற்று முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த குளித்தலை வட்டாட்சியர் முரளிதரன், இன்ஸ்பெக்டர் உதயகுமார், பொதுப் பணித்துறை உதவி செயற்பொறியாளர் வெங்கடேஷ் ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து, விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.