தி.மலையில் மாற்றுத்திறனாளிக்குரூ.78 ஆயிரத்தில் சக்கர நாற்காலி ஆட்சியர் சந்தீப் நந்தூரி வழங்கினார்

தி.மலையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு ரூ.78 ஆயிரத்தில் சிறப்பு சக்கர நாற்காலியை வழங்கிய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி.
தி.மலையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு ரூ.78 ஆயிரத்தில் சிறப்பு சக்கர நாற்காலியை வழங்கிய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி.
Updated on
1 min read

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு ரூ.78 ஆயிரத்தில் சிறப்பு சக்கர நாற்காலியை ஆட்சியர் சந்தீப் நந்தூரி வழங் கினார்.

தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். அப்போது அவர், ஆட்சியர் அலுவலகத்தில் மக்களி டம் இருந்தும், மாற்றுத் திறனாளி கள் நலஅலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளிடம் இருந்தும் 467 மனுக்களை பெற்றார்.

பின்னர் அவர், “15 பெண்களுக்கு இலவச தையல் இயந்தி ரம், ஒருவருக்கு தென்னை மரம் ஏறும் கருவி, ஒருவருக்கு சலவை பெட்டி மற்றும் ஒரு பார்வையற்ற பெண்ணுக்கு கறவை மாடு வாங்க ரூ.35 ஆயிரம் காசோலை” ஆகிய நலத்திட்ட உதவிகளை ஆட்சிய ரின் விருப்ப நிதியில் இருந்து வழங்கினார்.

இதையடுத்து அவர், “சேத்துப்பட்டு அடுத்த நெடுங்குணம் கிராமத்தில் வசிக்கும் நதியா என்றபெண்ணுக்கு ரூ.78 ஆயிரம் மதிப் பில் பேட்டரி மூலம் இயங்கும் சக்கர நாற்காலி மற்றும் 5 மாற் றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவிகளை" வழங்கினார்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமாரசாமி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கிருஷ்ணமூர்த்தி, சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியர் வெங்கடேசன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலக வளாகத்தில் தேர்தல் ஆணையம் அறிவுரைப்படி நடைபெற்ற சிறப்பு முகாமில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வழங்கப்பட்ட படிவங்களை ஆட்சியர் சந்தீப் நந்தூரி பெற்றுக்கொண்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in