Regional01
குழந்தை தொழிலாளர்கள் 52 பேர் மீட்பு
சேலம் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களில் 52 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.
சேலம் மாவட்ட எஸ்பி தீபாகாணிகர், கூடுதல் எஸ்பி பாஸ்கரன் தலைமையில் ஒவ்வொரு காவல் நிலையங்களின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் குழந்தை தொழிலாளர் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சிறிய பட்டறைகள், ஓட்டல், கடை, நிறுவனங்கள், தறி கூடம், வெள்ளிப்பட்டறைகளில் தனிப்படை போலீஸார் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் கடந்த 4 நாட்கள் மேற்கொண்ட ஆய்வில் பல்வேறு இடங்களில் பணிபுரிந்த 14 வயதுக்கு உட்பட்ட 52 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.
மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்கள் மாவட்ட குழந்தைகள் நல அலுவலகம் மற்றும் தென்போஸ்கா தொண்டு நிறுவனங்களின் மூலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
