விழுப்புரம் சங்கரமடத்தில் பஞ்ச ரத்ன கீர்த்தனை

விழுப்புரம் சங்கரமடத்தில் பஞ்ச ரத்ன கீர்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது.
விழுப்புரம் சங்கரமடத்தில் பஞ்ச ரத்ன கீர்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது.
Updated on
1 min read

விழுப்புரம் சங்கர மடத்தில் தெய்வத் தமிழ்ச்சங்கம் சார்பில் "விழுப்புரத்தில் திருவையாறு" நிகழ்ச்சி நடைபெற்றது.

விழுப்புரம் சங்கரமடத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணியளவில் மங்கல இசையோடு நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து பஞ்ச ரத்ன கீர்த்தனைகள் பாடப்பட்டன. பாபநாசம் சிவனின் பேத்தி ராதா கல்யாணராமன் சிறப்பு பாடகராக பங்கேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பாடினார். தொடர்ந்து அனைவரும் பஞ்ச ரத்ன கீர்த்தனைகள் பாடினர். வயலின் ராம்குமார், சிவராம், மிருதங்கம் லக்ஷ்மிநரசிம்மன், சபரிஷ், சாய்ச்ரிநாத் ஆகியோர் வாத்தியங்களை வாசித்தனர். ஏற்பாடுகளை தெய்வத் தமிழ்ச்சங்க செயலாளர் சூரியநாராயணன், தலைவர் சிவ.தியாக ராஜன், ராதிகா செய்திருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in