

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. அப்போது சிவகாசி அருகே உள்ள பள்ளப்பட்டியைச் சேர்ந்த மீனா தனது குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளுடன் ஆட்சியரின் கார் முன் அமர்ந்து தர்ணா செய்தார். இவரிடம் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.மங்களராமசுப்பிரமணியன் கோரிக்கைகளைக் கேட்டார்.
அப்போது, தனது வீட்டுக்குச் சென்றுவர பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்த பாதையை சிலர் அடைத்து விட்டதாகவும், ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி பலமுறை மனு கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறினார்.
அதையடுத்து, தர்ணாவில் ஈடுபட்ட மீனா மற்றும் அவரது குடும்பத்தினர் ஆட்சியரிடம் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களிடம் ஆட்சியர் இரா.கண்ணன் விசாரணை நடத்தினார். குறிப்பிட்ட இடத்தில் ஆக்கிரமிப்புகள் உள்ளதா என்பதை அறிந்து பாதை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரி வித்தார்.