மின்னணு வாக்காளர் அட்டை அறிமுகம்

மின்னணு வாக்காளர் அட்டை அறிமுகம்
Updated on
1 min read

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இந்திய தேர்தல் ஆணையம் மின்னணு வாக்காளர் அடையாள அட்டையைப் புதிதாக அறிமுகம் செய்துள்ளது.

இதனைச் சிறப்புச் சுருக்கத் திருத்தம் 2021-ன் நீட்சியாக கடந்த மாதம் 20-ம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள புதிய வாக்காளர்கள் www.nvsp.in என்ற இணையதள முகவரி மற்றும் voters helpline என்ற மொபைல்போன் செயலி மூலமும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மேலும், இதுதொடர்பான தகவல்களுக்கு 1950 என்ற இலவசத் தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தகவல்களைப் பெறலாம். இவ்வாறு ஆட்சியர் தெரிவித் துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in