தூத்துக்குடியில் போக்ஸோ சட்ட விழிப்புணர்வு முகாம்

தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்  நடைபெற்ற போக்ஸோ  சட்டம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் எஸ்பி   எஸ்.ஜெயக்குமார் பேசினார்.
தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற போக்ஸோ சட்டம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் எஸ்பி எஸ்.ஜெயக்குமார் பேசினார்.
Updated on
1 min read

தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் போக்ஸோ சட்டம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து காவல் கண் காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் பேசும்போது, “குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க பல்வேறு சட்டங்கள் நடைமுறையில் உள்ளன.

குறிப்பாக போக்ஸோ சட்டம், குழந்தை திருமண தடைச் சட்டம் போன்றவை குறித்து மாணவியருக்கு விழிப்புணர்வு தேவை.

பெண்களுக்கு உதவுவ தற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ‘காவலன் எஸ்.ஓ.எஸ்’ செயலி, இலவச தொலைபேசி எண் 1091 மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கென அரசால் வழங்கப்பட்டுள்ள இலவச தொலைபேசி எண் 1098, தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அலுவலக கட்டுப்பாட்டு அறையில் செயல்பட்டு வரும் வாட்ஸ் அப் வசதியுடன் கூடிய ‘ஹலோ போலீஸ்’ எண்- 9514144100 ஆகிய அவசர கால தொலைபேசி எண்களை பெண்கள், மாணவியர், பொதுமக்கள் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.

ஏற்பாடுகளை பள்ளியின் தலைமை ஆசிரியை சாந்தினி கவுசல் மற்றும் ஆசிரியைகள் செய்திருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in