சட்டப்பேரவைத் தேர்தலை பொறுத்தவரை திமுக கூட்டணியில் உள்ளோம் உழவர் உழைப்பாளர் கட்சி தகவல்

சட்டப்பேரவைத் தேர்தலை பொறுத்தவரை  திமுக கூட்டணியில் உள்ளோம் உழவர் உழைப்பாளர் கட்சி தகவல்
Updated on
1 min read

உழவர் உழைப்பாளர் கட்சி சார்பில், உழவர் தலைவர் நாராயணசாமியின் பிறந்தநாள் கூட்டம், திருப்பூர் மாவட்டம் பல்லடத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர்கு.செல்லமுத்து செய்தியாளர்களிடம் கூறும்போது, "விவசாயிகள் பயனடையும் வகையில், ரூ.12510 கோடி கடனை தமிழகமுதல்வர் தள்ளுபடி செய்திருப்பது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் செய்தி. அதேசமயம், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெறப்பட்ட கடன்களை ஒட்டுமொத்தமாக ரத்து செய்து உத்தரவிடுவதோடு, அவர்கள் மீண்டும் தொழில் செய்யும் வகையில் ரூ.ஒரு லட்சம் வட்டியில்லாத கடன் வழங்க உத்தரவிட வேண்டும்.

டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்துக்கு மதிப்பளிக்காமல் மத்திய அரசு ஒட்டு மொத்த விவசாயிகளை கேவலப் படுத்தி வருகிறது. தேர்தலைப் பொறுத்தவரை திமுக கூட்டணியில் உள்ளோம்" என்றார். டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், காரணம்பேட்டை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட உழவர் உழைப்பாளர் கட்சியினரை போலீஸார் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in